மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 14 பெண்கள் உட்பட 30 பேர் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர்.
சாஜா சன்ஸ்கிருதி மன்ச் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில், வேத மந்திரங்கள் முழங்க 30 இஸ்லாமியர்கள் இந்து மதத்திற்கு மாறினர்.
அவர்கள் அனைவரும் இது தொடர்பான ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி தாக்கல் செய்துள்ளதாகவும், இதில் எவ்வித விதிமீறலும் இல்லை எனவும் சாஜா சன்ஸ்கிருதி மன்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.