ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பாக அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் ஜூலை 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்தும், நாட்டின் இறையாண்மையை மதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.