ஈரோட்டில் சொத்து பிரச்சினை காரணமாக தாயை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த பாப்பாத்தி தனது மகன் பழனிச்சாமியுடன் வசித்து வந்துள்ளார்.
பாப்பாத்திக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகனிடம், பாப்பாத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, பாப்பாத்தியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பாப்பாத்தி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.