கேரளா மாநிலம் திருச்சூரில் ஓடிக் கொண்டிருந்த ரயிலின் எஞ்சினில் இருந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வள்ளத்தோல் நகர் ரயில் நிலையம் அருகே ஓடிக் கொண்டிருந்த எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சின் மற்றும் பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் சுமார் 1 மணி நேரம் பழுதுபார்த்து பெட்டிகளை எஞ்சினுடன் இணைத்தனர். ரயில் குறைவான வேகத்தில் வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.