கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தி கொலம்பியா அணி அபார வெற்றி பெற்றது.
அரிசோனாவில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகா – கொலம்பியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா அணி முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா அணி மேலும் 2 கோல்கள் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.