டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிபோட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி வடமாநிலங்களில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம், Barbados-ல் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இதனை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் மற்றும் பிரயக்ராஜில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.அதேபோல், வாராணாசியில் ரசிகர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.