ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி அமெரிக்க வீரர் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலிய வீரரான அலெசாண்டர் வுகிச் உடன் மோதினார்.
இதில் 7-க்கு 6, 7-க்கு 4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.