தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெக்குந்தி பகுதியில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சிலர் கண்டறிந்து சொல்லுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நெக்குந்தி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம் முருகேசன் என்பவர் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்தது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.