தெலங்கானா மாநிலம் சூர்ய பேட்டையில் பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியரின் காலை பிடித்து செல்லவேண்டாம் என மாணவர்கள் மன்றாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூலமாலா கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக சாய்ந்துலு என்பவர் பணியாற்றி வந்தார்.
அவருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டதையடுத்து, பள்ளியில் இருந்து செல்வதற்கு முன்பு மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி அறிவுரைகளை கூறினார். அப்போது ஆசிரியர் செல்வதை விரும்பாத மாணவர்கள் கண்கலங்கினர்.
மேலும், அவரது காலில் விழுந்து செல்ல வேண்டாம் என்று கதறும் மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.