வசந்த் விஹார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த குழிக்குள் 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
டெல்லியில் பரவலாக மழை பெய்து வருவதால், அக்குழியில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி, தேடுதல் பணி நடைபெற்றது. சுமார் 23 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.