கர்நாடகாவில் முதல்வர் சித்தாமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையேயான உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தரப்பினர், இன்னும் பல துணை முதலமைச்சர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
அதே சமயம், டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்களோ சித்தராமையாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அந்த பதவிக்கு சிவகுமாரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த உட்கட்சி பூசல் கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது