நெல்லையிலுள்ள பாபநாசம் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக பாபநாசம் அணையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போது அணையின் நீர்வரத்து 2 ஆயிரம் அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 101 புள்ளி 9 பூஜ்ஜியம் அடியாக அதிகரித்ததுள்ளது.
இதனால் பாசனம் மற்றும் குடிநீர் வசதிக்காக அணையிலிருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .