தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமணன்தொழுவைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் வருசநாடு சாலையில் மாயன் மற்றும் வனராஜ் ஆகிய இருவருடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.
இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.