மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர்கள் தாமாக முன்வந்து தான் விருப்ப ஓய்வு எடுக்கிறார்கள் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆட்சியர் கார்த்திகேயன், மாஞ்சோலை பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு விண்ணப்பம் கொடுக்கிறார்கள் எனவும், யாராவது கட்டாயப்படுத்தி விருப்பு ஓய்வு கொடுக்க கூறியிருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.