பலத்த மழையால் அயோத்தி ராமர் கோவில் சாலை சேதமடைந்த நிலையில், இதற்கு காரணமான பொதுப் பணித்துறை அலுவலர்கள் 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களான நிலையில், தற்போது அங்கு பெய்த கனமழையால் கோவில் பிராகாரத்தைச் சுற்றியுள்ள சாலை சேதமடைந்தது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகனங்கள் சிக்கி சேதமடைந்தன.
ராமர் கோவிலிலும் மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.