பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.
பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் செயல் தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் நீடிப்பதாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது.
இதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஐக்கிய ஜனதா தள தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.