லடாக்கில் ஷியோக் ஆற்றில் மூழ்கி ஐந்து ராணுவ வீரர்கள் பலியானதற்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில், வீரமிக்க ராணுவ வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த தேசமும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராணுவ வீரர்களின் வீரமிக்க, தன்னலமற்ற அர்ப்பணிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாய்நாட்டுக்காக உயிரை துச்சமென நினைத்து தியாகம் செய்த ராணுவ வீரர்களை தேசம் ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.