ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஸ்ரீ இருளப்பசாமி, ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயில் புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
மு.தூரி கிராமத்தில் ஸ்ரீ இருளப்பசாமி, ஸ்ரீ கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலின் ஆனி மாத பொங்கல் விழா மற்றும் புரவி எடுப்பு திருவிழா ஒரு வாரத்திற்கு முன் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் கோயிலின் முக்கிய விழாவான புரவி எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.