வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது.
திருவள்ளூரில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை சாலையில் சென்ற போது மின்கம்பிகள் உரசி வைக்கோல் மீது தீ வேகமாக பற்றியது.
இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.