குஜராத் மாநிலம் அகமதாபாத் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஹெலிகாப்டர் வாயிலாக போலீஸார் ஆய்வு செய்தனர்.
பிரசித்தி பெற்ற அகமதாபாத் ஜமால்பூர் ஜெகநாதர் கோவிலில், 147-ஆவது ரத யாத்திரை வரும் ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இதையொட்டி, அகமதாபாத் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் ஹெலிகாப்டர் வாயிலாக ஆய்வு செய்துள்ளனர்.