தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே சாலையோர மரத்தில் மர்மமான முறையில் கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த அம்பேத்கர் என்ற நபர், திருச்செந்தூர் அருகே கட்டட வேலை செய்து வந்துள்ளார்ர். இந்நிலையில் அப்பகுதியில் சாலையோரமாக உள்ள மரத்தில் தொங்கியபடி அம்பேத்கர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.