திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை சார்பில் இயங்கி வரும் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் நாளை முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்படுள்ளது.
இதில் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட் உள்ளிட்ட தொழிற் பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஆர்வமுள்ள பெண்கள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என தொழிற்பயிற்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.