ஈரோட்டில் போலி ரூபாய் தாள்களை கொடுத்து 20 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சின்னதம்பி பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமியிடம் 20 லட்ச ரூபாய் கொடுத்தால் 30 லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய முத்துசாமி அவரிடம் 20 லட்ச ரூபாயை கொடுத்துவிட்டு, ஒரு பணப்பெட்டியை வாங்கியுள்ளார்.
அதில் பணத்திற்கு பதிலாக வெள்ளைத்தாள்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் சாமிநாதன் மற்றும் அவருடைய நண்பர்களான ரமேஷ், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.