கேரளாவில் சுங்கச்சாவடியில் கார் பின்னால் இருப்பது தெரியாமல் லாரி ஓட்டுநர் பின்புறமாக இயக்கியதால், கார் சிறிது தூரம் பின்னோக்கி சென்றது.
கேரள மாநிலம் பாளையக்கரை சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக்கில் பணம் இல்லாததால், லாரி கவனக்குறைவாக பின்வாங்கியது. அப்போது பின்னால் வந்த கார் மீது லாரி மோதியது.
கார் ஓட்டுநர் சாமர்த்தியமாக ஸ்டியரிங்கை திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.