நாமக்கல்லில் பிறரை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சேலம் சாலை, புதுச்சத்திரம், பரமத்தி சாலையில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த புறவழிச்சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.