அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறான யோசனை சொல்லக்கூடிய அமைச்சர் அரசனுக்கு அருகில் இருப்பது 70 கோடி பகைவர்கள் சூழ்ந்து கொள்வதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.