சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சைதாப்பேட்டையில் 3 நாட்கள் மேற்கொள்ளப்படும் மருத்துவ முகாம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆணையர் பார்வையிட்டதாக கூறப்பட்டுள்ளது.
வீட்டின் குடிநீர் தொட்டிகளை தூய்மையாக வைப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை ஆணையர் வழங்கியதாகவும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.