புதுக்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக அப்துல்கான் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மண்டையூர் அடுத்த வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கான். இவர் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதன்பேரில், என்ஐஏ அதிகாரிகள், சுமார் 3 மணிநேரம் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீடியோ ஆதாரங்கள், கைபபேசி, பென்டிரைவ் உள்ளிட்டவற்ளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.