காங்கிரஸ் கட்சி விவாதங்களில் இருந்து தப்பித்து ஓடுவதற்கு பதிலாக அதில் பங்கேற்க முன்வர வேண்டுமென பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
விவாதம் நடத்துவதற்காகவே நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.