மதுரா அருகே நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே கிருஷ்ணா விஹார் பகுதியில் கனமழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து விபத்துள்ளானது.
இதில் சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 13 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததில் அருகே உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடன் நிலைமையைக் கேட்டறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நீர்த்தேக்கத் தொட்டியை கட்டிய ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.