கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பிற்காக நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்த நிலையில், ஆயிரத்து 563 பேரின் கருணை மதிப்பெண் ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 816 பேர் எழுதிய நிலையில், நீட் மறு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.