3 குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழே புகையிலை விற்பனை செய்ததாக தெருவோர வியாபாரி மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 285-ன் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்பவர் வாகனத்தில் புகையிலை விற்று வந்ததாகவும், பயணிகளுக்கு இடையூறு செய்ததாகவும் எஃப்ஆர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.