மதுரையில் சிக்கன் குழம்பை மறுநாள் சுடவைத்து சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலப்பனங்காடி பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் அதே பகுதியிலுள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் கிரேவி வாங்கி வந்து, அதை மறுநாள் சுட வைத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனந்த்ராஜை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.