மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அபிஷேகத்திற்காக 3 ஆண்டுகளுக்கு பிறகு வைகையாற்றில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டது.
மீனாட்சியம்மன் கோவில் முதற்கால பூஜைக்காக வைகை ஆற்றில் உள்ள கிணற்றில் இருந்து நீர் எடுத்து செல்லப்படுவது வழக்கம், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அறங்காவல் குழு தலைமையில் மேளதாளங்கள் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.