தேனி அருகே மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் மேலும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 28-ம் தேதி ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில் மேலும் 6 பேருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. இதனையடுத்து விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.