மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக சாலையில் ஊர்ந்து செல்லும் முதலையின் வீடியோ இணையத்தில் வைரலானது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், ரத்னகிரி பகுதியில் ஆற்றில் இருந்து வெளியேறிய 8 அடி நீள முதலை சாலையில் ஊர்ந்து சென்றுள்ளது. இதனைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென் வனத்துறையினர் முதலையை பிடித்து மீண்டும் நீர்நிலைகளில் விடும் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.