தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் காகித துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன், தற்போது சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபொபொதுப்பணித் துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் கேபிள் டிவி இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.