மாநிலங்களவையில் ஆர்எஸ்எஸ் குறித்து காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துகளை நீக்குமாறு அவைத் தலைவர் கெஜதீப் தன்கர் உத்தரவிட்டார்.
குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் உரையில் ஏழைகள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக எந்த திட்டமும் இடம் பெறவில்லை என குற்றம்சாட்டினார்.
குடியரசுத் தலைவர் உரையில் தொலைநோக்கு சிந்தனையோ, வழிகாட்டுதலோ இல்லை என விமர்சித்த அவர், கல்விமுறை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலையீடு இருப்பதாக சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து, கார்கேவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்ட அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பது குற்றமா என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆர்எஸ்எஸ் என்பது நாட்டிற்காக உழைக்கும் ஒரு அமைப்பு என்றும், சர்வதேச அளவில் புகழ்பெற்றது எனவும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.