பெரம்பலூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் தங்கள் கிராமத்தில் சாலை வசதி, கால்வாய் மற்றும் நூலகம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.