புனேவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஜிகா வைரல் வேகமாக பரவி வருகிறது. ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புனே மாநாகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் புனேவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
புனேவில் முதல் முறையாக 2 கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த இளைஞர் உள்ளிட்ட இருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக மருத்துவர் மற்றும் அவரது மகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். ஜிகா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.