மத்தியப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டம் ரவுடி கிராமத்தில் ராகேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
விவசாய கூலித் தொழிலாளியான ராகேஷ் இரவு குடும்பத்தினருடன் உறங்க சென்ற நிலையில் காலை சடலமாக மீட்கப்பட்டார்.
ராகேஷ், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் ஒரு மகள் ஆகிய 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற போலீசார் 5 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
5 பேரும் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.