தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கரன்சியில் 2.1 சதவீதம் அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி அறிவித்திருந்தது.
அந்த வகையில், அதே ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் கரன்சியை ஆர்பிஐ-யின் கிளை அலுவலகத்தில் செலுத்தி, மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
தபால் வாயிலாகவும் 2 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. பின்னர், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், புழக்கத்தில் இருந்த 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாயில், இதுவரை 2.1 சதவீதம் திரும்பவில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் தங்களிடம் திரும்பவில்லை என ஆர்பிஐ கூறியுள்ளது.