அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதில் michelle ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.
அப்போது ஜோ பைடன், தடுமாற்றத்துடனும், மக்களுக்கு புரியாத வகையிலும் பதிலளித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதனால், அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி michelle ஒபாமாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.