கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அனுமதியில்லாமல் மணல் கடத்திய நான்கு பேர் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசட்டை வெள்ளாறு பகுதியில் காப்புகாட்டில் ஒலையூர் கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி உள்ளிட்ட நான்கு பேர் மணல் அள்ளி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக அலுவலர்களை கண்டு அனைவரும் தப்பியோடியனர். இதனையத்து அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.