உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைப்பெற்ற மத நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகல்கர்ஹி கிராமத்தில் நடைபெற்ற மத நிகழ்வு பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிவடையும்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 23 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள், எட்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் மேலும் பலர் உயர்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருகிறது.
இந்நிலையில், விபத்திற்கான காரணங்களை விசாரிக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக ஆக்ரா மண்டல கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் போலீஸ் கமிஷனர் உட்பட ஒரு குழுவை அமைத்துள்ளது.