2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதுதான் தமது இலக்கு என்று பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, தனது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து செயல்படுவதாக குறிப்பிட்டார்.
2014-ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல்தான் தலைப்பு செய்தியாக இடம்பெற்றதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதிகள் தாங்கள் விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக கூறிய பிரதமர், இதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மவுனம் காத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
பின்னர் பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், கேரளத்தில் முதன்முறையாக பாஜக எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.