குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, 18-ஆவது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அந்த வகையில் ஜூன் 3-ஆம் தேதி நிறைவடைய இருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி கூடிய நாடாளுமன்றம், 7 அமர்வுகளாக 34 மணிநேரத்துக்கும் மேல் செயல்பட்டது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 68 உறுப்பினர்கள் பேசினர்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி 2 மணிநேரம் 12 நிமிடங்கள் பதிலளித்துப் பேசினார். அதன்பின்னர், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.