தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளத்தில் உள்ள பிரதான சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மகாராஜன், துர்கைசெல்வம் ஆகிய இரு இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதேப்போல் நல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற மணிகண்டன் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர்.