கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வருகிறார்.
இவர் கடந்த மாதம் 29-ம் தேதி காணமால் போன நிலையில் அவரை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மாணவிக்கு சக மாணவன் தாலி கட்டிய புகைப்படம் இணையத்தில் பரவியது. இது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் தோகை மலை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.