ஐரோப்பிய நாடான நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூஃப் பதவியேற்றுக் கொண்டார்.
நெதர்லாந்து பிரதமராக இருந்த வலதுசாரி ஆதரவாளரான மார்க் ரூட், நேட்டோ பொதுச் செயலராக பதவியேற்கவுள்ளார்.
இதனையடுத்து நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூஃபுக்கு அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி ஹேக் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.